பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே..
அல்ஹம்துலில்லாஹ் ரமதான் துவங்குவதற்குள் தீவிர முயற்சி செய்து கீழ் தளத்தை தயார் செய்தோம்.சகோதர சகோதரிகளே...எங்கள் கையிருப்பினை கொண்டே முடிந்தவரை கட்டிடத்தை மேலெழுப்பியுள்ளோம். இன்னும் அதை சரி செய்யவும், பாதுகாப்பானதாக ஆக்கவும், அல்லாஹ்வின் உதவியை நாடுகின்றோம். அதன் பின் தங்களின் தயவை.
நன்றியும் புகழும் இறைவனுக்கே அன்றி வேறில்லை. தங்களின் உதவியை இன்னும் எதிர்நோக்கியவாறு உள்ளோம். பள்ளிவாசலில் நோன்பு திறக்க வருபவர்களுக்கும் நாங்கள் வைத்திருப்பது அரிசி கஞ்சியும் வடை, சட்னியுமே. இதில் அருகில் வசிக்கும் முஸ்லிமல்லாதவர்களும் அடக்கம்.
தயவு செய்து ரமதான் மாதத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் எழுபது மடங்கு வரை நன்மையை பெருக்கித் தரும் வேளையில் மனமுவந்து எங்களின் மஸ்ஜிதிற்கு உதவி செய்வீர்களாக. எங்கள் பிள்ளைகள் படிப்பதும் இதே கொட்டகையில், இன்னும் அவர்களுக்கென தனி இடம் ஒதுக்கி தரவும் இயலா நிலையில் உள்ளோம்.
சகோதர சகோதரிகளே...அல்லாஹ்வின் இல்லத்திற்கு, அவனுக்கென்று சுஜூதை தனிப்படுத்தி ஒவ்வோர் நாளிலும் ஐந்து தடவைக்கும் மேல் அவனுக்கு மட்டும் சுஜூது செய்கின்றோமே...அந்த ஆலயத்திற்காக, இன்ஷா அல்லாஹ் மனமுவந்து செய்யுங்கள்.
மேன்மை மிகு, சங்கை மிகு புனித ரமதான் மாதம் மீது பல்வேறு ஹதீத்துக்களும் திரு குர்'ஆன் வாசகங்களும் உள்ளன. அவை யாவும் வான்மறை வந்திறங்கிய இந்த மாதத்தின் நன்மையையே பறை சாற்றுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றுப் படி,
‘ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாயில்கள் திறக்கப்படும், நரகத்தின் வாயில்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
‘ரமழானின் முதல் இரவு வந்து விடுமானால் ஷைத்தான்களும், அட்டூழியம் புரியும் ஜின்களும் விழங்கிடப்படுகின்றனர். நரகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படும் அதில் ஏதும் திறக்கப்படமாட்டாது, சுவர்க்கத்தின் அனைத்து வாயில்களும் திறக்கப்படும் அதில் ஏதும் மூடப்படமாட்டாது. ஓர் அழைப்பாளர் நன்மையை விரும்புபவர்களே அதிகம் நன்மை செய்யுங்கள், பாவங்களை விரும்புபவர்களே பாவங்களை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுப்பார். ஒவ்வொரு இரவும் நரகத்திற்குரியவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.’ என நபிகள் நாயகம் (ஸல்ய) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா).
சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் இவ்வேளையில் அல்லாஹ்விற்கு அழகிய கடனை அளித்து முன்னேறுங்கள். அதிகமதிகம் நன்மைகளை பெற வேண்டி அழைப்பவருக்கு பதில் கூறுங்கள். நோன்பும், குர் ஆனும், சதகாவும் இன்னும் பல நற்செயல்களும் செவ்வனே நிறைவேற்றி இந்த மாதத்தின் அனைத்து நன்மைகளையும் குறையின்றி பெற்றிடுங்கள். சகோதர சகோதரிகளே எங்கள் மஸ்ஜிதிற்கு அளிக்கும் நன்கொடையானது இன்ஷா அல்லாஹ் நரகத்திலிருந்து தங்களை பாதுகாக்கும் கேடயமாக விளங்கட்டும் என்று அதிகமதிகம் து'ஆ செய்கிறோம். மீண்டும் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்.
வாகிர்தவா'னா ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
மஸ்ஜித் மாமூர்
Saturday, August 21, 2010
Thursday, August 5, 2010
நன்கொடை விவரம்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே,
நேரிலோ அல்லது தபால் மூலமோ தங்களின் நன்கொடை எம்மை சேர விருப்பப்பட்டீர்களானால், கீழ்கண்ட விலாசத்திற்கு வருகை தரவும். மேலும் வங்கி மூலமாக அளிக்க விரும்பினால், கீழ்கண்ட விவரங்களை உபயோகிக்கவும். எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கு இரு உலகத்தின் நன்மையையும் வாரி வழங்கிடுவானாக. ஆமீன்.
பள்ளிவாசல் விவரம்:
சைட் எண் 8, நேரு நகர்,
காந்தி மாநகர் அருகில்,
கணபதி,
கோவை 641006
மஸ்ஜித்தின் நிர்வாகத்தை அணுக: 98-43-11-21-99
வங்கி விவரம்.

Labels:
கோவை மஸ்ஜித்,
சந்தா,
நன்கொடை,
பள்ளிவாசல்,
மசூதி,
மஸ்ஜித்,
மாமூர்,
ஜகாத்
Wednesday, August 4, 2010
எங்கள் கோரிக்கை
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)!
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கணபதி பகுதியில் அமைந்துள்ள காந்தி மாநகர், கணபதி மாநகர், தென்றல் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நமது சமுதாயத்தை சேர்ந்த சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் பல குடும்பங்கள் இங்கு வீட்டு மனை வாங்கியுள்ளனர். இதனால் இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் அதிகமான குடும்பங்கள் இங்கு குடியேற வாய்ப்பு உள்ளது. ஆகையால் இஸ்லாத்தின் முக்கிய கடமையான தொழுகையை நிலைநாட்டவும் வருங்கால சந்ததிகளின் நலன் நாடியும் இங்கு ஒரு இறை இல்லத்தை கட்டுவதற்கு அனைத்து குடும்பத்தினரும் ஒரு மனதாக முடிவு செய்து சுமார் 12 லட்ச ரூபாயில் 4.5 சென்ட் இடம் வாங்கி அதில் செட் அமைத்து ஐந்து நேர தொழுகை இமாம் ஜமாஅத்தாக நடை பெற்று வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
மேற்படி அமைக்கப்பட்டுள்ள செட்டில் மழை நேரங்களில் தண்ணீர் ஒழுக்கு ஏற்பட்டு தொழுகைக்கு இடையூறாக உள்ளது. மேலும் பாதுகாப்பு குறைவாக உள்ளது. எனவே அந்த இடத்தில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்து வேலைகளை ஆரம்பித்துள்ளோம்.
இப்பகுதியில் வாழும் நமது சமுதாய மக்களில் பெரும்பான்மையினர் வேலைக்கு செல்பவர்களாக உள்ளனர். இந்த நிலையில் மேற்கண்ட குடும்பத்தினர் மட்டும் சேர்ந்து பள்ளிவாசல் கட்டுவது இயலாது என்பதால் அல்லாஹ் நமது சமுதாயத்திற்கு பொறுப்பாளர்களாக ஆக்கியுள்ள தங்களின் மேலான உதவி மற்றும் வழிகாட்டுதலை நாடி வந்துள்ளோம்.
இந்த வலைப்பூவின் மூலமாக, அல்லாஹ்வின் விருப்பத்திற்கு இணங்க (இன்ஷா அல்லாஹ்), தங்களின் உதவியை நாடுவது, து'ஆ மூலமும், மனமுவந்து அளிக்கும் சதகா மற்றும் ஜகாத் மூலமும் இன்னும் பிற ஹலாலான வழிகளிலும் இறையில்லத்தை மேம்பட செய்யுங்கள் என்பதே. தங்களின் மேலான உதவிக்கு எல்லாம் வல்ல இறைவன் இம்மையிலும் மறுமையிலும் மகத்தான நற்கூலி வழங்கிடுவானாக. ஆமீன். ஆமீன். அல்லாஹும்ம ஆமீன்.
வஸ்ஸலாம்.
தங்களின் ஆதரவை நாடி,
முஹல்லாவாசிகளின் சார்பாக: மஸ்ஜித் மாமூர்.

Subscribe to:
Posts (Atom)